இந்தியா உலகத்தை தனது குடும்பமாக பார்க்கிறது - துணை ஜனாதிபதி ஐகதீப் தன்கர் பேச்சு


இந்தியா உலகத்தை தனது குடும்பமாக பார்க்கிறது - துணை ஜனாதிபதி ஐகதீப் தன்கர் பேச்சு
x

கோப்புப்படம்

இந்தியா உலகத்தை தனது குடும்பமாக பார்ப்பதாக குடியரசு துணை தலைவர் ஐகதீப் தன்கர் தெரிவித்தார்.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ஒரு தேசிய ராணுவ கல்லூரியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஐகதீப் தன்கர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நமது இந்தியா சமத்துவ நாடு. இதனால் வேறு நாடுகள் கஷ்டத்தில் இருக்கும் பொழுது பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அதேபோல் கடந்த 2 ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா தொற்று பரவியது. இந்த தொற்றினால் தினம்தோறும் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். பின்னர் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில் நமது இந்தியா "வசுதைவ குடும்பம்"(உலகையே தனது குடும்பமாக கருதுகிறது). மேலும் நமது அரசியலமைப்புச் சட்டத்தின் முகவுரையில் நமது உள்ளார்ந்த நம்பிக்கைகளை விவாதிக்கிறது. அதன் அடிப்படையில் மட்டும் தான் நமது நாடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்றின் போது உலகத்தையே நமது குடும்பமாக கருதி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா பல்வேறு நாடுகளுக்கு வழங்கியது. இப்படி ஒரு செயலை உலகத்தில் இருக்கும் எந்த ஒரு நாடும் செய்யவில்லை என அவர் கூறினார்.


Next Story