அரைகுறை உடை... ஆபாச பேச்சு... பணக்காரர்களை வலையில் சிக்கவைத்து அடியாட்களுடன் பணம் பறித்த இன்ஸ்டா பிரபலம்
இன்ஸ்டாகிராமில் அவரை 2 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலம் லுதியானா மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெஸ்தெத் கவுர். சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் இவரை சுமார் 2 லட்சம் பேர் பின் தொடர்கின்றனர்.
இதனிடையே, ஜெஸ்தெத் கவுர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரைகுறை உடையுடன் புகைப்படங்கள், வீடியோவை பகிர்ந்து வந்தார்.
இதனை தொடர்ந்து அவரது இன்ஸ்டாகிராம் கணக்கிற்கு பலர் மெசேஜ் அனுப்பியுள்ளனர். அதில், பணக்காரர்களை மட்டும் ஜெஸ்தெத் கவுர் குறிவைத்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் தனக்கு மெசேஜ் அனுப்பும் பணக்காரர்களுடன் ஜெஸ்தெத் கவுர் அரைகுறை ஆடையுடன், ஆபாசமாகவும், ஆசையாகவும் பேசியுள்ளார்.
பின்னர், தன்னுடன் இன்ஸ்டாகிராமில் பேசிய பணக்காரர்களின் மெசேஜ்களை ஸ்கீரின் ஷார்ட் மூலம் சேமித்து பின்னர் அதேநபர்களுக்கு அனுப்பி வைத்து பணம் கேட்டுள்ளார். கேட்ட பணத்தை தரவில்லை என்றால் மேசேஜ்களை உறவினர்களுக்கு அனுப்பிவிடுவதாகவும் போலீசில் புகார் அளித்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
மேலும், ஜெஸ்தெத் கவுருக்கு லூதியானாவில் சில அடியாட்கள் தெரியும் என்பதால் அவர்கள் மூலம் தன் வலையில் சிக்கிய பணக்காரர்களை மிரட்டியுள்ளார். கேட்ட பணத்தை கொடுக்காத நபர்களை அடியாட்கள் மூலம் கவுர் மிரட்டியுள்ளார். அடியாட்கள் பணக்காரர்களின் செல்போனை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
இந்நிலையில், ஜெஸ்தெத் கவுரின் வலையில் சிக்கிய பணக்காரர் ஒருவர் பணம் கேட்டு அடியாட்கள் மூலம் மிரட்டப்பட்டதால் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இன்ஸ்டா பிரபலம் ஜெஸ்தெத் கவுரை கைது செய்தனர். மேலும் அவரது கூட்டாளி லக்கி சிந்து என்ற நபர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஜெஸ்தெத் கவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். ஜெஸ்தெத் கவுரின் பிஎம்டபுள்யூ சொகுசு கார், செல்போனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.