பெங்களூருவில் முதலீட்டாளர்கள் மாநாடு:
ஜெர்மனியில் தொழில் முதலீட்டாளர்களை மந்திரி முருகேஷ் நிரானி சந்தித்தார்.
பெங்களூரு:
கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாடு வருகிற நவம்பர் 2-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடக்கிறது. இதையொட்டி தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பல்வேறு நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அங்குள்ள தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்து வருகிறார். அதேபோல் அவர் கடந்த ஒரு வாரமாக ஐரோப்பிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு நேற்று ஜெர்மனி நாட்டிற்கு சென்றார். அங்கு தொழில் முதலீட்டாளர்களை நேரில் சந்தித்து பேசினார். அப்போது பெங்களூருவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். இந்த சந்திப்பின்போது, தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளர் ரமணரெட்டி, கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story