உத்தரபிரதேசத்தில் அக்னிவீரர் தேர்வில் முறைகேடு; 2 பேர் கைது


உத்தரபிரதேசத்தில் அக்னிவீரர் தேர்வில் முறைகேடு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 7 Oct 2022 4:15 AM IST (Updated: 7 Oct 2022 4:15 AM IST)
t-max-icont-min-icon

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு அக்னிவீரர்களை சேர்க்கும் முகாம் நடந்து வந்தது.

முசாபர்நகர்,

உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கு அக்னிவீரர்களை சேர்க்கும் முகாம் நடந்து வந்தது. இதில் போலி ஆவணங்கள் மூலம் தகுதித்தேர்வில் சிலர் பங்கேற்பதாக ராணுவ உளவுத்துறை, போலீசாருக்கு தகவல் தெரிவித்தது.

இதைத்தொடர்ந்து போலீஸ் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர். அப்போது போலி ஆவணங்கள் மூலம் முறைகேட்டில் ஈடுபட முயன்ற 2 பேர் போலீசாரிடம் சிக்கினர். முகாமுக்கு அருகே அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story