நாட்டில் பட்டினிச்சாவு இருக்கிறதா? - நாடாளுமன்றத்தில் கேள்வி
நாட்டில் பட்டினிச்சாவு இருக்கிறதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மக்களவையில் எம்.பி. ஒருவர், நாடு இன்னும் பட்டினிச்சாவு பிரச்சினையை எதிர்கொள்கிறதா? அப்படி இருந்தால் அதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன? என கேள்வி கேட்டு இருந்தார். இதற்கு மத்திய வர்த்தகம், தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரி பியூஷ் கோயல் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-
நாட்டில் பட்டினிச்சாவு இல்லை. ஒரு மாநில அரசு அல்லது யூனியன்பிரதேச அரசுகூட இப்படிப்பட்ட சம்பவத்தை தெரிவிக்கவில்லை. ஏழை பயனாளிகளின் நிதிச்சுமையை நீக்க பொது வினியோகத்துறையின் கீழ் உணவு தானியங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில்தான் ஒரேநாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story