விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் வீடியோவை வெளியிட்டது இஸ்ரோ
விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
பெங்களூரு,
நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி பூமியில் இருந்து அனுப்பப்பட்டது. விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம் லேண்டர், பின்னர் நேற்று மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்குவதில் வெற்றியடைந்தது.
இதனையடுத்து, நிலவில் தரையிறங்கிய லேண்டரில் இருந்து வெளியே வந்த ரோவர் தனியே நகர்ந்து தனது ஆய்வு பணியை தொடங்கி உள்ளது என இஸ்ரோ அறிவித்து உள்ளது.
லேண்டரில் ILSA, RAMBHA, chaSTE ஆகியவற்றின் செயல்பாடுகள் இயக்கப்பட்டு உள்ளன. இதேபோன்று, நிலவின் மேல்பரப்பில் உள்ள மண்ணின் தன்மை, வளிமண்டலம் உள்ளிட்ட விசயங்களை பற்றி ரோவர் ஆய்வு பணிகளை மேற்கொள்ளும். உந்து விசைக்கலன் அமைப்பு கடந்த ஞாயிறு முதல் தனித்து செயல்பட்டு வருகிறது என்றும் இஸ்ரோ தெரிவித்து உள்ளது.
இந்த நிலையில் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. லேண்டரில் பொருத்தப்பட்ட கேமிராவில் எடுத்த பரபரப்பு காட்சியை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.
Here is how the Lander Imager Camera captured the moon's image just prior to touchdown. pic.twitter.com/PseUAxAB6G
— ISRO (@isro) August 24, 2023