ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் பெயர் மாற்றம் இஸ்ரோ தகவல்


ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் பெயர் மாற்றம் இஸ்ரோ தகவல்
x

புவிசார் செயற்கைகோள்களை செலுத்தும் ராக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.எல்.வி எனவும் பெயரிடப்பட்டு உள்ளன.

புதுடெல்லி,

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) செயற்கைேகாள்களை விண்ணில் செலுத்துவதற்கு பல்வேறு வகையான ராக்கெட்டுகளை தயாரித்து வருகிறது. இதில் துருவ செயற்கைகோள்களை புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தும் ராக்கெட்டுகளுக்கு பி.எஸ்.எல்.வி. எனவும்,புவிசார் செயற்கைகோள்களை செலுத்தும் ராக்கெட்டுகளுக்கு ஜி.எஸ்.எல்.வி எனவும் பெயரிடப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் நேற்று 36 செயற்கைகோள்களை சுமந்து சென்ற மிகப்பெரிய ராக்கெட்டுக்கு ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 என பெயரிடப்பட்டு இருந்தது. இந்த ராக்கெட் நிலவு, சூரியன், நடுத்தர புவி சுற்றுப்பாதை, கீழ்மட்ட சுற்றுப்பாதை, மேல்மட்ட சுற்றுப்பாதை என அனைத்து இடங்களுக்கும் செல்லும்.

எனவே இதில் குழப்பத்தை தவிர்ப்பதற்காக ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட்டின் பெயரை 'எல்.வி.எம்-3'என (செலுத்து வாகனம் மார்க்-3) என்று இஸ்ரோ மாற்றியுள்ளது.

வருகிற 2024-ம் ஆண்டு விண்வெளிக்கு மனிதனை அனுப்புதல் போன்ற முக்கிய திட்டங்களுக்கு இந்த ராக்கெட்டுகளை பயன்படுத்த இஸ்ரோ திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story