சிறப்பு சட்டம் 370 இருந்தபோது காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவது கூட மிகவும் கடினம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
சிறப்பு சட்டம் 370 இருந்தபோது காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவது கூட மிகவும் கடினம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கூறினார்.
கவுகாத்தி,
அசாம் மாநிலம் ஐஐடி கவுகாத்தியில் (இந்திய தொழில்நுட்ப நிறுவனம்) நேற்று நடந்த நிகழ்ச்சியில் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் மாணவ/மாணவிகள் மத்தியில் பேசிய அனுராக் தாக்கூர் பேசுகையில், சிறப்பு சட்டம் 370 இருந்தபோது காஷ்மீரில் தேசியக்கொடி ஏற்றுவது கூட மிகவும் கடினம். ஆனால், சிறப்பு சட்டம் 370 நீக்கப்பட்ட பின்னர் கடந்த ஆண்டு ஹர் கர் திரங்கா கொண்டாட்டத்தின்போது காஷ்மீரின் ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக்கொடி இருந்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்' என்றார்.
Related Tags :
Next Story