மும்பை விமானத்தில் குடிபோதையில் தகராறு செய்த இத்தாலிய பெண் கைது


மும்பை விமானத்தில்  குடிபோதையில் தகராறு செய்த இத்தாலிய பெண் கைது
x

அபுதாபியிலிருந்து மும்பை செல்லும் விஸ்தாரா விமானத்தில் இத்தாலிய பெண்மணி ஒருவர் பணியாளரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மும்பை,

மும்பை விமானத்தில் பயணித்த இத்தாலிய பெண்மணி விமான பணியாளரை கத்தியால் குத்தியுள்ளார்.

அபுதாபியிலிருந்து மும்பை செல்லும் விஸ்தாரா விமானத்தில் இத்தாலிய பெண்மணி ஒருவர் பணியாளரை கத்தியால் குத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த பாவ்லா பெரூசியோ (Paola Perruccio) என்ற பெண் ஏர் விஸ்டாரா விமானம் யுகே 256 இல் மது குடித்துவிட்டு பணியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அவர் சாதாரண விமான பயணசீட்டை வைத்துக்கொண்டு தனக்கு உயர்தர பயணசீட்டிற்கான இருக்கையை தருமாறு பணியாளர்களை வற்புறுத்தியுள்ளார். பணியாளர்கள் தர மறுத்ததையடுத்து இத்தாலிய பெண் பணியாளர் ஒருவரின் மீது கத்தியால் குத்தியுள்ளார். மற்றொருவர் மீது எச்சில் துப்பி, அரைகுறை ஆடையுடன் சாதாரணமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தார். விமானம் மும்பையில் தரையிறங்கியவுடன் விமான பணி குழுவினர் அந்த பெண் மீது புகாரளித்தனர். அவர்கள் அளித்த புகாரை தொடர்ந்து இத்தாலிய பெண்ணை மும்பை காவல் துறையினர் கைது செய்தனர்.


Next Story