42 ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய ஜக்கனக்கி குளம்; தடுப்பு சுவர் அமைக்க மக்கள் கோரிக்கை
ஜகலூர் அருகே, 42 ஆண்டுகளுக்கு பின் ஜக்கனக்கி குளம் நிரம்பியது. மேலும் குளத்தை சுற்றி தடுப்பு சுவர் அமைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
தாவணகெரே மாவட்டம் ஜகலூர் அருகே ஜக்கனக்கி குளம் உள்ளது. இந்த குளம் கடந்த 1980-ம் ஆண்டு முழுவதுமாக நிரம்பியது. இதையடுத்து தற்போது அந்த பகுதியில் பெய்து வரும் கனமழையால் குளம் 42 ஆண்டுகளுக்கு பின் முழுவதும் நிரம்பியது.
இந்த குளத்து தண்ணீரை விவசாயிகள் பெருமளவு விவசாயத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இந்த குளத்தில் இருந்து வெளியேறும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள சாலையை மூழ்கடித்து செல்கிறது.
இதனால் அந்த சாலையில் வாகனங்களில் செல்ல வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்து உள்ளனர். இதனால் அந்த குளத்தில் இருந்து தண்ணீர் வெளியேறாமல் இருக்க அந்த சாலை அருகில் தடுப்பு சுவர் அமைக்க அந்த பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடன் கோரிக்கை வைத்துள்ளனர். முழுவதும் நிரம்பிய குளத்தை அந்த பகுதி மக்கள் பாா்த்து ரசித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story