பூரி ஜெகநாதர் ரத யாத்திரை - 125 மணல் ரதங்களை உருவாக்கி அசத்திய மணல் கலைஞர்


பூரி ஜெகநாதர் ரத யாத்திரை - 125 மணல் ரதங்களை உருவாக்கி அசத்திய மணல் கலைஞர்
x
தினத்தந்தி 1 July 2022 10:01 AM IST (Updated: 1 July 2022 10:21 AM IST)
t-max-icont-min-icon

ஒடிசா மாநிலம் பூரியில் இன்று ஜெகநாதரின் புனித ரத யாத்திரை தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

ஒடிசா:

ஒடிசாவின் புனித நகரமான பூரியில் ஜகந்நாதரின் புகழ்பெற்ற ரத யாத்திரை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த யாத்திரைக்காக ஜகந்நாதர், தேவி சுபத்ரா மற்றும் பலபத்ரா ஆகிய மூன்று ரதங்களும் இழுக்கப்பட்டு நேற்று ஸ்ரீமந்திராவின் சிங்க துவாராவின் முன் நிறுத்தப்பட்டுள்ளன.

உரிய சடங்குகளுக்குப் பிறகு யாத்திரை தொடங்குகிறது. விழாவையொட்டி, மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், ஒடிசா காவல்துறை உயர்மட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. ரத யாத்திரையை முன்னிட்டு குடியரசுத் துணை தலைவர் வெங்கையா நாயுடு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அப்போது அவர், ரத யாத்திரையின் புனிதமான நாளில் நமது நாட்டு மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடிசாவின் ரத யாத்திரை, பகவான் விஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படும் பகவான் ஜகந்நாதரின் வருடாந்திர பயணத்தை சித்தரிக்கிறது.

இறைவனின் கருணை மற்றும் தெய்வீகத்தனமையைக் கொண்டாடும் வகையில் ஒட்டுமொத்த சமூகமும் ஒன்றுசேர்ந்ததைக் காட்டுகிறது. ரத யாத்திரையில் சேரும் பக்தர்கள் ஜகந்தாதரின் தேர் இழுப்பதை தங்களின் பாக்கியமாக கருதுகின்றனர்.

ரத யாத்திரையின் சிறப்பும் மகத்துவமும் உண்மையிலேயே இணையற்றது. ரத யாத்திரையுடன் தொடர்புடைய புனிதமான மற்றும் உன்னத லட்சியங்கள் நம் வாழ்க்கையை அமைதி மற்றும் நல்லிணக்கத்துடன் வளப்படுத்தட்டும் என அவர் கூறினார்.

மேலும் ரதயாத்திரையை முன்னிட்டு மணல் கலைஞர் சுதர்சன் பட்நாயக் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இந்த முறை ஜெகநாதரின் புனித ரத யாத்திரையைக் குறிக்கும் வகையில் 125 மணல் ரதங்களை உருவாக்கியுள்ளோம். இது எங்களின் புதிய உலக சாதனையாக இருக்கும் என்றார்.


Next Story