நியூசிலாந்தில் புதிய இந்திய தூதரக அலுவலகம்: ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
நியூசிலாந்தில் புதிய இந்திய தூதரக அலுவலகத்தை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் திறந்து வைத்தார்
வெலிங்டன்,
மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று அவர் வெலிங்டன் நகரில் புதிய இந்திய தூதரக அலுவலகத்தை திறந்து வைத்தார்.
பின்னர், அங்கு வந்திருந்த இந்திய வம்சாவளியினரிடையே ஜெய்சங்கர் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
வர்த்தகம், மின்னணு, வேளாண்மை, பாரம்பரிய மருத்துவம், கல்வி, கடல்சார் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இந்தியா-நியூசிலாந்து இடையே ஒத்துழைப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எந்த உறவுக்கும் வர்த்தகம் நல்லது. எனவே, வர்த்தகத்தை அதிகரிக்க நாம் வழி காணவேண்டும். கிரிக்கெட்டிலும் இரு நாடுகளுக்கிடையே நல்ல உறவு உள்ளது. இந்தியாவில் உள்ள யாரும் ஜான் ரைட்டை மறக்க மாட்டார்கள். ஸ்டீபன் பிளெமிங்கை மறக்க மாட்டார்கள். நமது அணி வெற்றிபெற வேண்டும் என்று நினைத்தாலும், நியூசிலாந்து அணி வீரர்களுக்கு வாழ்த்து சொல்வார்கள் என்று அவர் கூறினார்.