ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி 50 சதவீதம் நிறைவு!


ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் வழங்கும் பணி 50 சதவீதம் நிறைவு!
x

2024-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டுமென்ற தொலைநோக்குப் பார்வையின்படி, கிராமப்புறங்களில் உள்ள 50 சதவீத வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கோவா, தெலங்கானா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நாகர் ஹவேலி மற்றும் டாமன் டையூ, புதுச்சேரி மற்றும் அரியானா ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் ஏற்கனவே 100 சதவீத குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதேபோல, பஞ்சாப், குஜராத், இமாச்சலபிரதேசம் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் 90%-க்கும் மேல் பணிகளை முடித்து, 'அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு' என்ற இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.

இதுவரை, பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 9.59 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளுக்கு, குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை, ஜல் சக்தி அமைச்சகம், மாநிலங்கள் அரசுகளுடன் இணைந்து, 2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்யும் வகையில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது, 3.23 கோடி வீடுகள், அதாவது 17% கிராமப்புற மக்கள் தான், குழாய்வழி குடிநீர் வசதியைப் பெற்றிருந்தனர். ஆனால், 27.05.2022 நிலவரப்படி, 108 மாவட்டங்களில், 1,222 வட்டாரங்களில், 71,667 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 1,51,171 கிராமங்கள் குழாய்வழி குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story