ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு


ஜல்லிக்கட்டு, மாட்டுவண்டி பந்தயத்தை எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை: மத்திய அரசு
x

“கேலோ இந்தியா” உள்ளிட்ட எந்த திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை .

புதுடெல்லி,

நாடாளுமன்ற மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின் போது இந்தியாவில் மாட்டுவண்டி பந்தயம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதா என மக்களவை உறுப்பினர் ரவனீத் சிங் பிட்டு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய மத்திய விளையாட்டு துறை மந்திரி அனுராக் தாகூர் கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் "கேலோ இந்தியா" உள்ளிட்ட எந்த திட்டத்தின் கீழும் ஜல்லிக்கட்டு இல்லை .

மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை எந்த திட்டத்தின் கீழும் அங்கீகரிக்கவில்லை.

மேலும், மாட்டுவண்டி பந்தயம் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டியை ஊக்குவிக்கும் திட்டமும் இல்லை என தெரிவித்தார்,.


Next Story