பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று பெங்களூரு வருகை
விஜய சங்கல்ப யாத்திரையில் பங்கேற்க பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று பெங்களூரு வருகிறார்.
பெங்களூரு:-
கர்நாடக பா.ஜனதா பொதுச் செயலாளர் சித்தராஜூ பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி எங்கள் கட்சி சார்பில் விஜய சங்கல்ப யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. பெங்களூரு கே.ஆர்.புராவில் நாளை(இன்று) நடைபெறும் விஜய சங்கல்ப யாத்திரையில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொள்கிறார். தனி விமானம் மூலம் வரும் அவர் மாலை 5.20 மணிக்கு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் கே.ஆர்.புரத்திற்கு வரும் அவர், அங்கு நடைபெறும் விஜய சங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, மந்திரிகள் ஆர்.அசோக், எம்.டி.பி.நாகராஜ், பைரதி பசவராஜ், சுதாகர் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு சித்தராஜூ கூறினார்.