ஜார்கண்ட்: மாவோயிஸ்டுகள் புதைத்த கண்ணிவெடியில் சிக்கி விவசாயி உயிரிழப்பு
மாவோயிஸ்டுகள் புதைத்த கண்ணிவெடியை எதிர்பாராமல் மிதித்த விவசாயி உயிரிழந்தார்.
ராஞ்சி,
ஜார்கண்ட் மாநிலம் சிங்பூப் மாவட்டம் அருகே இச்சாகட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி கிருஷ்ணா. இவருடைய மனைவி நந்தினி. கிருஷ்ணா தன் மனைவியுடன் காட்டுப்பாதை வழியாக வயலுக்கு சென்று கொண்டிருந்தபோது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை எதிர்பாராமல் மிதித்துவிட்டார்.
இதனால் கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் சம்பவ இடத்திலேயே கிருஷ்ணா உடல் சிதறி செத்தார். நந்தினி படுகாயம் அடைந்தார். மாவோயிஸ்டுகள் நாசவேலை நிகழ்ந்த அப்பகுதியில் கண்ணிவெடி புதைத்தது தெரிந்தது.
Related Tags :
Next Story