ஜம்மு காஷ்மீரில் நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!
நாக்பால் பகுதியில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்குட்பட்ட ஷோபியானின் நாக்பால் பகுதியில் இன்று பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது.
போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் பயங்கரவாதிகளுக்கு எதிரான சண்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இன்று நடந்த என்கவுன்டரில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் லஸ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என தெரிய வந்துள்ளது.மேலும், சண்டை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
இந்த என்கவுன்டர் பற்றிய முழு விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும் என்று ஜம்மு காஷ்மீர் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story