காஷ்மீர்: சகவீரர்களை துப்பாக்கியால் சுட்டு எல்லைப்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை


காஷ்மீர்: சகவீரர்களை துப்பாக்கியால் சுட்டு எல்லைப்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை
x

காஷ்மீரில் சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய எல்லைப்பாதுகாப்பு படை வீரர் தற்கொலை செய்துகொண்டார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் இந்தோ-தீபெத் எல்லைப்பாதுகாப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அந்த வகையில் ஜம்முவின் உதம்பூர் மாவட்டத்தில் இந்தோ-தீபெத் படையின் 8-வது பிரிவு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

அந்த பிரிவில் படைவீரராக பணியாற்றி வந்தவர் பூபேந்திர சிங். இவர் தேவிகா கட் சமூதாய கூடத்தில் இன்று மாலை 3.30 மணியளவில் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு பணியில் இருந்த சக வீரர்களுக்கு பூபேந்திர சிங்கிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பூபேந்திரர் தனது துப்பாக்கியை கொண்டு சக வீரர்களை சரமாரியாக சுட்டார். பின்னர், தனது துப்பாக்கியை கொண்டு தன்னைத்தானே சுட்டு பூபேந்திர தற்கொலை செய்துகொண்டார்.

பூபேந்திர சிங் சுட்டதில் 3 வீரர்கள் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த 3 வீரர்களும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சக வீரர்கள் மீது பூபேந்திர சிங் துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கான காரணம் என்ன? என்பது குறித்து பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story