லேப்டாப் எடுப்பவர்களுக்கு வேலையும், கல் எறிபவர்களுக்கு சிறைச்சாலையும் தயாராக உள்ளது - அமித்ஷா


லேப்டாப் எடுப்பவர்களுக்கு வேலையும், கல் எறிபவர்களுக்கு சிறைச்சாலையும் தயாராக உள்ளது - அமித்ஷா
x

லேப்டாப் எடுப்பவர்களுக்கு வேலையும், கல் எறிபவர்களுக்கு சிறைச்சாலையும் தயாராக உள்ளது என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்ட தேர்தல் செப்டம்பர் 18ம் தேதியும், 2ம் கட்ட தேர்தல் செப்டம்பர் 25ம் தேதியும், 3ம் கட்ட தேர்தல் அக்டோபர் 1ம் தேதியும் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தல் நெருங்கி வரும் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். முதற்கட்ட தேர்தல் பிரசாரம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

இந்நிலையில், ஜம்மு-காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் உள்துறை மந்திரி அமித்ஷா பாஜக வேட்பாளரை ஆதரித்து இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது,

தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் போன்றவை பயங்கரவாதிகள், கல் எறிபவர்களை விடுதலை செய்ய நினைக்கின்றன. அப்போதுதான் ஜம்மு காஷ்மீர் மீண்டும் பயங்கரவாதத்திற்குள் செல்லும்.

பயங்கரவாதிகள், கல் எறிபவர்களை விடுதலை செய்து அவர்களுக்கு வேலை கொடுக்க அந்த கட்சிகள் நினைக்கின்றன.

ஆனால், அவர்களுக்கு நான் கூறுவது என்னவென்றால் மோடி தலைமையிலான அரசு கையில் லேப்டாப் மற்றும் தேசியக்கொடி எடுக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தயாராக உள்ளது என்பதுதான். தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி, காங்கிரஸ் போன்ற கட்சிகள் காஷ்மீரில் பயங்கரவாதத்தை மீண்டும் கொண்டுவர அனுமதிக்கமாட்டோம். கல் எறிபவர்களுக்கு சிறைச்சாலைகள் தயாராக உள்ளது' என்றார்


Next Story