ஆற்றில் குதித்து கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை
ஆற்றில் குதித்து கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
பெங்களூரு: கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா ஒபாலபுரா பகுதியை சேர்ந்தவர் ருத்ரவ்வா(வயது 30). இவருக்கு திருமணமாகி 1½ வயதில் மகன் உள்ளான். இந்த நிலையில் இவருக்கும், இவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இந்த நிலையில் ருத்ரவ்வா, தனது கைக்குழந்தையுடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
இதையடுத்து அவர் புறநகர் பகுதியில் உள்ள மல்லபிரபா ஆற்றுப்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், தீயணைப்பு படையினர், புறநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். மேலும், அவர்கள் 2 பேரின் உடல்களையும் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story