ரேஷன் பொருட்கள் விநியோக திட்டத்தில் ஊழல்: மேற்கு வங்காள மந்திரி பதவி பறிப்பு


ரேஷன் பொருட்கள் விநியோக திட்டத்தில் ஊழல்: மேற்கு வங்காள மந்திரி பதவி பறிப்பு
x
தினத்தந்தி 17 Feb 2024 3:30 AM IST (Updated: 17 Feb 2024 6:52 AM IST)
t-max-icont-min-icon

ரேசன் விநியோகத்திட்டத்தில் நடந்த ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட மேற்கு வங்காள மந்திரி ஜோதிப்ரியா மாலிக் பதவி பறிக்கப்பட்டது.

கொல்கத்தா,

மேற்குவங்க மாநில ஆளும் திரிணாமுல் காங்., முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அமைச்சரவையில் தொழிற்சாலை மறுசீரமைப்பு துறை மந்திரியாக இருப்பவர் ஜோதிப்ரியா மாலிக்.

முன்னர் உணவு பாதுகாப்பு மந்திரியாக இருந்த போது, ரேஷன் பொருட்கள் விநியோக திட்டத்தில் பெருமளவு ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதனை அமலாக்கத்துறை விசாரித்து வந்தது.இதில் நடந்துள்ள பண மோசடி வழக்கில் மந்திரி ஜோதிப்ரியா வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.கடந்தாண்டு அக்டோபரில் ஜோதிப்ரியா மாலிக் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கவர்னருக்கு அளித்த பரிந்துரையின் பேரில் ஜோதிப்ரியா மாலிக் மந்திரி பதவியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். அவர் வகித்து வந்த இலாகாவை பிர்பஹா ஹன்ஸ்தாவிடம் வழங்கப்பட்டது.


Next Story