கோலார் தங்கவயலில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாட்டம்


கோலார் தங்கவயலில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாட்டம்
x

கோலார் தங்கவயலில் கனகதாசர் ஜெயந்தி கொண்டாட்டம் கோலாகலம்.

கோலார் தங்கவயல்-

கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை நகரசபை எதிரே உள்ள சுபாஷ் சந்திரபோஸ் பூங்காவில் கனகதாசர் சிலை உள்ளது. நேற்று அங்கு நகரசபை நிர்வாகம் சார்பில் கனகதாசர் ஜெயந்தி விழா நடந்தது. விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. ரூபா கலா சசிதர், நகரசபை தலைவர் வள்ளல் முனிசாமி, தாசில்தார் சுஜாதா, நகரசபை கமிஷனர் மாதவி மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். கனக தாசர் சிலைக்கு மாலை அணிவித்த எம்.எல்.ஏ. ரூபாகலா சசிதர், கனகதாசர் உருவப்படம் வைத்து அலங்கரிக்கப்பட்ட ரதத்தை தொடங்கி வைத்தார். அதை தொடர்ந்து பா.ஜனதா தலைவர் மோகன் கிருஷ்ணா தனது ஆதவாளர்களுடன் சென்று கனகதாசரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து கனகதாசர் உருவப்படத்துடன் கூடிய ரதங்கள் கோலார் தங்கவயல் முழுவதும் ஊர்வலமாக சென்றன. அதே போல் கோலார் மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் வெங்கடராஜா முன்னிலையில் கனகதாசர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தாலுகா நிர்வாகம் சார்பில் தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் சுஜாதா முன்னிலையில் கனகதாசர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


Next Story