சொத்து தகராறில் கன்னட நடிகரை சுட்டுக்கொல்ல முயற்சி- போலீஸ் விசாரணை


சொத்து தகராறில் கன்னட நடிகரை சுட்டுக்கொல்ல முயற்சி-  போலீஸ் விசாரணை
x

சொத்து தகராறில் கன்னட நடிகரை சுட்டுக்கொல்ல முயற்சி நடந்துள்ளது.

பெலகாவி: பெலகாவி மாவட்டம் பைலஒங்கலா டவுனில் வசித்து வருபவர் சிவரஞ்சன் போலண்ணவர். பழம்பெரும் கன்னட நடிகரான இவர் கன்னடத்தில் சில படங்களில் நடித்து உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிவரஞ்சன் வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், சிவரஞ்சனை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் மீது குண்டுபடவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தப்பி சென்று விட்டனர்.

இதுகுறித்து அறிந்ததும் பெலகாவி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சஞ்சீவ் எம்.பட்டீல், பைலஒங்கலா போலீசார் சிவரஞ்சன் வீட்டிற்கு சென்று அவரிடம் விசாரித்தனர். அப்போது சொத்து தகராறில் தன்னை எனது சகோதரர் மற்றும் சகோதரர் மனைவியின் உறவினர் மகன் சுட்டுக்கொல்ல முயன்றதாக சிவரஞ்சன் தெரிவித்து இருந்தார். மேலும் சம்பவம் குறித்து அவர் அளித்த புகாரின்பேரில் பைலஒங்கலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story