கான்பூர் வன்முறை தொடர்பாக 24 பேர் கைது; 800 பேர் மீது வழக்கு


கான்பூர் வன்முறை தொடர்பாக 24 பேர் கைது; 800 பேர் மீது வழக்கு
x

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் மத வன்முறை தொடர்பாக 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதகாகவும் கான்பூர் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கான்பூர்,

டி.வி. விவாதம் ஒன்றில் பங்கேற்ற டெல்லியை சேர்ந்த பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மா, சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் உத்தரபிரதேசத்தின் கான்பூரில் ஒரு பிரிவினர் கடையடைப்பு போராட்டத்துக்கு நேற்று முன்தினம் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதில் பயங்கர வன்முறை மூண்டது. நூற்றுக்கணக்கில் சாலைகளில் குவிந்த அந்த பிரிவினர் டயர்களை கொளுத்தியும், கடைகளை அடைக்க வற்புறுத்தியும் தாக்குதல் நடத்தினர். இதனால் ஏற்பட்ட கலவரத்தில் 20 போலீஸ்காரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.

இதைத்தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் அணிவகுப்பு ஊர்வலம் போன்றவை நடத்தி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அத்துடன் கண்காணிப்பு கேமரா பதிவுகள் அடிப்படையில் கைது நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளனர்.

அந்தவகையில் 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதில் உள்ளூர் அமைப்பு ஒன்றின் தலைவரான ஹயாத் சபர் ஹாஸ்மியும் அடங்குவார்.

மேலும் 12 பேரை பிடித்து விசாரித்து வரும் போலீசார், இந்த வன்முறை தொடர்பாக 800-க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துடன் வன்முறையில் ஈடுபட்டவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்யவோ அல்லது அழிக்கவோ முடிவு செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story