கப்பன் பூங்கா, கே.ஆர்.சர்க்கிள் உள்பட பெங்களூருவில் 75 சாலைகளில் காலை நேர போக்குவரத்துக்கு தடை?
கப்பன் பூங்கா, கே.ஆர்.சர்க்கிள் உள்பட பெங்களூருவில் 75 சாலைகளில் காலை நேர போக்குவரத்துக்கு தடையா?
பெங்களூரு: பெங்களூருவில் கப்பன் பூங்கா, லால்பாக் உள்பட பல்வேறு பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் அதிகாலை நேரங்களில் நகரவாசிகள் உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக முதியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்கு இந்த பூங்காக்கள் வசதியாக உள்ளன. இந்த நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து புறப்பட்டு, பூங்காவை சேர்வதற்குள் கடும் போக்குவரத்தை சந்திக்க வேண்டி உள்ளதாக குற்றம்சாட்டினர். மேலும், அவர்கள் இதற்கு தீர்வு காண வேண்டும் என போக்குவரத்து போலீசாருக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பெங்களூருவில் உள்ள முக்கிய சாலைகளில் காலை நேர போக்குவரத்துக்கு தடை விதிக்க வேண்டும் என மாநகராட்சியிடம், போக்குவரத்து துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. இந்த நிலையில் பெங்களூருவில் கப்பன் பூங்கா, மைசூரு பேங்க் சர்க்கிள், பாசியம் சர்க்கிள், கிரெசன்ட் சாலை, ஓல்டு போஸ்டு ஆபிஸ், கே.ஆர். சர்க்கிள் உள்பட 75 சாலைகளில் காலை நேர போக்குவரத்துக்கு தடைவிதிக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் பெங்களூரு சாலைகளில் காலை நேரங்களில் நடைபயிற்சி, சைக்கிள் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக இருக்கும் என போக்குவரத்து அதிகாரிகள் கூறி உள்ளனர்.