சிறுமி பலாத்காரம்: கராத்தே பயிற்சியாளருக்கு 10 ஆண்டு சிறை - உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு


சிறுமி பலாத்காரம்: கராத்தே பயிற்சியாளருக்கு 10 ஆண்டு சிறை - உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் கராத்தே பயிற்சியாளருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

உடுப்பி:

சிறுமி பலாத்காரம்

உடுப்பி மாவட்டம் படுபித்ரியை சேர்ந்தவர் உமேஷ் பங்கேரா (வயது 45). இவர் கராத்தே பயிற்சியாளராக உள்ளார். இந்த நிலையில், அவரிடம் அதேப்பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி கராத்தே பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில், அந்த சிறுமியை உமேஷ் பங்கேரா மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இதுகுறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி உள்ளாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் ெபற்றோர், இதுபற்றி படுபித்ரி போலீசில் புகார் கொடுத்தனர்.

10 ஆண்டு சிறை

அதன்பேரில் படுபித்ரி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உமேஷ் பங்கேராவை கைது செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2020-ம் ஆண்டு நடந்தது. மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு உடுப்பி மாவட்ட மற்றும் செசன்சு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி சீனிவாஸ் சுவர்ணா நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார்.

அப்போது உமேஷ் பங்கேரா மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனையும், ரூ.22 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறி இருந்தார்.


Next Story