கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழா - கொட்டும் மழைக்கு நடுவே ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு


கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழா - கொட்டும் மழைக்கு நடுவே ரசிகர்களிடம் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
x
தினத்தந்தி 1 Nov 2022 8:01 PM IST (Updated: 1 Nov 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

பெங்களூரு,

கர்நாடக மாநிலத்தின் 67-வது உதய தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த கலந்து கொண்டார். முன்னதாக மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அறிவிக்கப்பட்ட கர்நாடக அரசின் உயரிய விருதான கர்நாடக ரத்னா விருதை, அவரது மனைவி அஸ்வினி புனித் ராஜ்குமாரிடம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்கினார்.

இந்த விழாவில் கொட்டும் மழைக்கு நடுவே ரசிகர்களின் பலத்த ஆரவாரத்துக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் பேசினார். கர்நாடக மக்களுக்கு அந்த மாநிலத்தின் 67-வது உதய தின விழா வாழ்த்துக்களை அவர் தெரிவித்துக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "நடிகர் புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தினத்தில் மழை வந்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. அவர் இறைவனின் பிள்ளை" என்று கூறினார்.

மேலும் சாதி, மத பேதங்களின்றி அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்று கூறிய ரஜினிகாந்த், தன்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழக மக்களுக்கும் தனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டார்.


Next Story