கர்நாடகாவில் வந்தே பாரத் ரெயில் மீது மீண்டும் கல்வீச்சு: 2 ஜன்னல்கள் சேதம்


கர்நாடகாவில் வந்தே பாரத் ரெயில் மீது மீண்டும் கல்வீச்சு: 2 ஜன்னல்கள் சேதம்
x

கர்நாடகா மாநிலம் கிருஷ்ணராஜபுரம் - பெங்களூரு சென்ற வந்தே பாரத் ரெயில் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடகம் மாநிலம் கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு சென்ற வந்தே பாரத் ரயில் மீது மீண்டும் கல்வீச்சு நடத்தப்பட்டது. இதில், 2 ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

மைசூரு-சென்னை வந்தே பாரத் ரெயில் மீது கர்நாடகம் மாநிலம் கிருஷ்ணராஜபுரம்-பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிற்றுக்கிழமை மர்மநபர்கள் சிலர் கற்களை வீசினர். இதில், ரெயிலின் இரண்டு கண்ணாடிகள் சேதமடைந்ததாகவும், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

வந்தே பாரத் ரெயில்கள் மீது இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், கடந்த ஜனவரியில் 21 கல்வீச்சு சம்பவங்களும், இந்த மாதம் 13 கல்வீச்சு சம்பவங்களும் ரெயில்வே பாதுகாப்புப் படை வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெற்கு ரெயில்வே வேதனை தெரிவித்துள்ளது.


Next Story