கர்நாடகம், வளர்ச்சியின் அதிகார மையம்; பிரதமர் மோடி கருத்து


கர்நாடகம், வளர்ச்சியின் அதிகார மையம்; பிரதமர் மோடி கருத்து
x
தினத்தந்தி 14 March 2023 12:15 AM IST (Updated: 14 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகம், வளர்ச்சியின் அதிகார மையம் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார்.

பெங்களூரு:

பிரதமர் மோடியின் மண்டியா சுற்றுப்பயணம் குறித்து ஒருவர் டுவிட்டரில் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு மோடி தனது டுவிட்டரில் அளித்துள்ள பதிலில், "வளர்ச்சி, பல்வேறு துறைகளில் கர்நாடகம் வழங்கும் பங்களிப்பு ஆகிய விஷயத்தில் கர்நாடகம் அதிகார அதிகார மையமாக திகழ்கிறது. இந்த சிறந்த மாநிலத்திற்கு சேவையாற்றுவது எனக்கு கிடைத்த கவுரமாக கருதுகிறேன்" என்றார். பிரதமர் மோடி நேற்று முன்தினம் கர்நாடகத்திற்கு வருகை தந்தார். மண்டியா, தார்வாரில் நடந்த விழாவில் அவர் ரூ.16 ஆயிரம் கோடிக்கு திட்டங்களை தொடங்கி வைத்தார். மண்டியாவில் அவர் திறந்த காாில் ஊர்வலமாக வந்து மக்களின் வரவேற்பை ஏற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story