காஷ்மீர் என்கவுண்ட்டர்: 3 பயங்கரவாதிகள் சுட்டு கொலை
ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.
ஜம்மு,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் அவந்திப்போரா பகுதியில் கந்திப்போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று துப்பாக்கி சண்டை நடந்தது.
இந்த சம்பவத்தில் 3 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி காஷ்மீர் ஏ.டி.ஜி.பி. கூறும்போது, சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதிகளை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
இதில், வெளிநாட்டை சேர்ந்த ஒரு பயங்கரவாதி மற்றும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தின் உள்ளூரை சேர்ந்த முக்தியார் பட் என்ற மற்றொரு பயங்கரவாதி என கிடைத்த தகவலின் அடிப்படையில் தெரிய வந்து உள்ளது.
சி.ஆர்.பி.எப்.பின் (மத்திய ரிசர்வ் போலீஸ் படை) உதவி காவல் ஆய்வாளர் ஒருவர் மற்றும் ஆர்.பி.எப். அதிகாரிகள் 2 பேரை சுட்டு கொன்றது உள்பட பல்வேறு பயங்கரவாத செயல்களுடன் முக்தியார் பட்டுக்கு தொடர்பு உள்ளது என அவர் கூறியுள்ளார்.