ஒவ்வொரு தேர்தலின்போதும் பழைய நாடகத்தை அரங்கேற்றுகிறார் - கெஜ்ரிவால் மீது பா.ஜனதா தாக்கு


ஒவ்வொரு தேர்தலின்போதும் பழைய நாடகத்தை அரங்கேற்றுகிறார் - கெஜ்ரிவால் மீது பா.ஜனதா தாக்கு
x

கோப்புப்படம்

ஒவ்வொரு தேர்தலின்போதும் பழைய நாடகத்தை அரங்கேற்றுகிறார் என்று கெஜ்ரிவால் மீது பா.ஜனதா குற்றம் சாட்டியுள்ளது.

புதுடெல்லி,

ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்-மந்திரியுமான கெஜ்ரிவால், பா.ஜனதாவையும், பிரதமர் மோடியையும் நேற்று கடுமையாக குறைகூறியிருந்தார்.

அதாவது குஜராத் தேர்தலில் தோல்வி பயத்தால் ஊழல் என்ற பெயரில் ஆம் ஆத்மியை அழிக்கப்பார்ப்பதாக குற்றம் சாட்டினார். குஜராத்தில் ஆம் ஆத்மியின் வளர்ச்சியால் அவர்கள் அஞ்சுவதாகவும் தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுத்துள்ள பா.ஜனதா, ஒவ்வொரு மாநில தேர்தலின்போதும் கெஜ்ரிவால் பழைய நாடகத்தை அரங்ேகற்றுவதாக சாடியுள்ளது.

இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா கூறுகையில், '2 மாநிலங்களில் வெற்றி பெற்றவுடன் கெஜ்ரிவால் தன்னை கடவுளாக நினைத்து வருகிறார். நேர்மை அல்லது நேர்மையின்மை குறித்து நீதித்துறையை விட கெஜ்ரிவாலின் சான்றிதழ்தான் முக்கியம் போல தெரிகிறது' என தெரிவித்தார்.

கெஜ்ரிவாலை பார்த்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடனும் அஞ்சுவதாக அவர் சொல்லாதது ஆச்சரியமாக உள்ளது என கிண்டல் செய்த சம்பித் பத்ரா, மதுபான கொள்கையில் கமிஷன் பெற்ற கெஜ்ரிவால் தன்னை கிருஷ்ண பகவானுடன் ஒப்பிடுவதாகவும் கூறினார். மேலும் ஊழலை கெஜ்ரிவால் புகழ்ந்துரைப்பதாகவும் குற்றம் சாட்டினார்.


Next Story