கேரள நடிகையை கடத்தி பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கு - சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கேரள நடிகையை கடத்தி, துன்புறுத்திய வழக்கு விசாரணையை அடுத்த ஆண்டு ஜூலைக்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்துக்கு, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கு விசாரணையை நடத்தி முடிக்க காலக்கெடு விதிக்க கோரி நடிகர் திலீப் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வு, வழக்கு விசாரணையை ஜூலைக்குள் முடிக்க விசாரணை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டதுடன், இது தொடர்பான விசாரணையை ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Related Tags :
Next Story