கேரளா: காதலனுடன் சென்ற மகள் - விரக்தியில் பெற்றோர் தற்கொலை


கேரளா: காதலனுடன் சென்ற மகள் - விரக்தியில் பெற்றோர் தற்கொலை
x

கேரளாவில் காதலனுடன் மகள் வீட்டை விட்டு வெளியேறியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் பவும்பா பகுதியைச் சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன். இவரது மனைவி பிந்து. இந்த தம்பதியின் மகள் கல்லூரியில் படித்து வரும் நிலையில், அவர் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு உன்னிகிருஷ்ணனும், அவரது மனைவியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அவர்களது மகள் தனது காதலில் உறுதியாக இருந்துள்ளார். மேலும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி தனது காதலனுடன் அவர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தங்களது மகள் காதலனுடன் சென்றதால் விரக்தியடைந்த உன்னிகிருஷ்ணன்-சிந்து தம்பதி, சில மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே உன்னிகிருஷ்ணன்-சிந்து தம்பதி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக அவர்களது உறவினர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story