15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை; 66 வயது நபருக்கு 81 ஆண்டுகள் சிறை
15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 66 வயது நபருக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவனந்தபுரம்,
2020 அக்டோபர் மாதம் சிறுமியை உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அப்போது, அந்த சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அதேபகுதியை சேர்ந்த 66 வயது நபரை கைது போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியை அவர் பல முறை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து, அந்த நபரை சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இந்த பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 15 வயது சிறுமியை குற்றவாளியான 66 வயது நபர் பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது. இதையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 66 வயது குற்றவாளிக்கு 81 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும், குற்றவாளிக்கு 2.2 லட்ச ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. தீர்ப்பையடுத்து, குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.