பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே, ராகுல் காந்தி பங்கேற்பார்கள்: காங்கிரஸ்


பீகாரில் நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கார்கே, ராகுல் காந்தி  பங்கேற்பார்கள்: காங்கிரஸ்
x

எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி நிச்சயம் பங்கேற்பார்கள் என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

பாட்னா,

பீகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வரும் ராகுல் காந்திக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படும் என மாநில காங்கிரஸ் தலைவர் அகிலேஷ் பிரசாத் சிங் தெரிவித்துள்ளார்.

2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் பிகார் முதல்வர் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார். பிகார் மாநிலம் பாட்னாவில் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ள அவர், இதில் தலைவர்கள்தான் பங்கேற்க வேண்டும் என்றும் கட்சிகள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பக் கூடாது என்றும் அறிவுறுத்தி இருந்தார்.இந்த நிலையில், ராகுல் காந்தி, கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தவிர, ஆகியோர் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.


Next Story