இளநீர் வியாபாரியின் மகனை கடத்தி


இளநீர் வியாபாரியின் மகனை கடத்தி
x
தினத்தந்தி 26 Dec 2022 12:15 AM IST (Updated: 26 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பத்ராவதி அருகே இளநீர் வியாபாரியின் மகனை கடத்தி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

சிவமொக்கா:-

சிறுவன் கடத்தல்

சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தாலுகா நியூ டவுன் போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள மேம்பாலம் அருகே வியாபாரி ஒருவர் இளநீர் கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் அந்த கடையில் தனது மகனை வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் வந்து சிறுவனிடம் இளநீர் வேண்டும் என்று கேட்டுள்ளார். அதை கேட்ட சிறுவன் இளநீரை வெட்டி கொண்டிருந்தார். அப்போது அந்த நபர், இந்த இளநீர் காரில் இருக்கும் நண்பர்களுக்கு கொடுக்கவேண்டும். நீயே சென்று கொடுத்துவிடு என்று கூறினார்.

அதன்படி சிறுவன் இளநீரை, காரில் இருந்தவர்களுக்கு கொடுப்பதற்கு சென்றார். அப்போது காரில் வந்த 3 பேர் சிறுவனை பிடித்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அவர்கள் சிறுவனை அங்கிருந்து கடத்தி சென்றனர். இதையடுத்து சிறுவனின் தந்தையை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், நாங்கள் யாசின் என்ற ரவுடியின் கூட்டாளிகள், உங்கள் மகன் திரும்ப வர வேண்டும் என்றால் ரூ.10 லட்சம் கொடுக்கும்படி கூறினர்.

5 பேர் கும்பல் கைது

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுவனின் தந்தை உடனே பத்ராவதி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் செல்போன் சிகடத்தல் கும்பல் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் அங்கு விரைந்த போலீசார் 5 பேரை கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த சிறுவனையும் போலீசார் மீட்டனர். இந்நிலையில் கைதான 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் பத்ராவதியை சேர்ந்த முபாரக், சாகர், அப்துல் சலாம், இர்பான், முஸ்தபா என்று தெரியவந்தது. பணத்திற்கு ஆசைப்பட்டு சிறுவனை கடத்தியதாக தெரியவந்தது. கைதான 5 பேர் மீதும் பத்ராவதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story