நள்ளிரவு நேரம்...! கொல்கத்தா அணியின் கேப்டன் மனைவியை பின் தொடர்ந்த வாலிபர்கள்....!


நள்ளிரவு நேரம்...!  கொல்கத்தா அணியின் கேப்டன் மனைவியை பின் தொடர்ந்த வாலிபர்கள்....!
x

பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்ததால் டெல்லி போலீசில் புகார் அளிக்க தயங்குவதாகவும் சச்சி கூறி இருந்தார்.

கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் நிதிஷ் ராணாவின் மனைவி சாச்சி மர்வாவை பின்தொடர்ந்த 2 வாலிபர்களை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

சாச்சி மர்வா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு வீடியோவெளியிட்டிருந்தார், அதில் பைக்கில் வந்த இருவர் அவரது காரை துரத்திச் சென்று தாக்குவதைக் காண முடிந்தது. அவர்கள் ஏன் அவ்வாறு செய்தார்கள் என்பது தெரியவில்லை.இச்சம்பவம் கிர்த்தி நகரில் சனிக்கிழமை இரவு நடந்தது.பாதுகாப்பாக வீடு வந்து சேர்ந்ததால் டெல்லி போலீசில் புகார் அளிக்க தயங்குவதாகவும் சச்சி கூறி இருந்தார்.

இதை தொடர்ந்து டெல்லி போலீசார் இந்த வழக்கில் இரண்டு குற்றவாளிகளை கைது செய்தனர். அவர்கள் பாண்டவ் நகரைச் சேர்ந்த சைட்னயா சிவம் (18), படேல் நகரை சேர்ந்த விவேக் (18) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக டெல்லி போலீசார் தெரிவித்தனர்.


Next Story