முல்பாகல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்


முல்பாகல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்
x

முல்பாகல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத் மீண்டும் காங்கிரசில் சேர்ந்தார்.

பெங்களூரு

கோலார் மாவட்டம் முல்பாகல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. கொத்தூர் மஞ்சுநாத். ஜனதாதளம் (எஸ்) கட்சியில் அரசியல் பயணத்தை தொடங்கிய இவர் பின்னர் காங்கிரசில் ேசர்ந்தார். அந்த கட்சியில் இருந்து விலகிய அவர் பா.ஜனதாவில் இணைந்தார். இந்தநிைலயில் நேற்று டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் அக்கட்சியில் சேர்ந்தார்.

அப்போது கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார், முன்னாள் மந்திரி சிவசங்கரரெட்டி, கோலார் தொகுதி ஜனதா தளம் (எஸ்) எம்.எல்.ஏ. சீனிவாச கவுடா ஆகியோர் உடன் இருந்தனர். சீனிவாச கவுடா எம்.எல்.ஏ. சமீபத்தில் ஜனதாதளம் (எஸ்) கட்சியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விைரவில் காங்கிரசில் ேசர இருப்பதாக கூறப்படுகிறது.


Next Story