கோலாா் தங்கவயல் தொகுதியில் குமாரசாமி போட்டி
கோலார் தங்கவயல் தொகுதியில் குமாரசாமி போட்டியிடுவதாக ஜனதா தளம் (எஸ்) கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
கோலார் தங்கவயல்:-
கோலார் தங்கவயல் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர் ரமேஷ்பாபு நேற்று தங்கவயலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பஞ்சரத்னா யாத்திைர கோலார் தங்கவயலுக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இதனால் வருகிற 7-ந்தேதி குமாரசாமி கோலார் தங்கவயலுக்கு வருகிறார். தங்கவயலில் நடக்கும் கூட்டத்தில பங்கேற்று பேசுகிறார். கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் தங்கவயல் தொகுதியில் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் குமாரசாமி போட்டியிடுவார். பா.ஜனதா, காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட்டாலும் கவலை இல்லை. மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story