10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 37 வயது நபர் கைது
பள்ளியில் ‘நல்ல தொடுதல், தீய தொடுதல்’ தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் ஜிண்ட்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிக்கூடத்தில் 'நல்ல தொடுதல், தீய தொடுதல்' தொடர்பாக மாணவ-மாணவிகளிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பெண் தலைமை காவலர் உள்பட பல்வேறு போலீசார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது, அந்த பகுதியில் படிக்கும் 10 வயது சிறுமி தனக்கு ஒரு நபர் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக பெண் போலீசிடம் தெரிவித்தார்.
சிறுமி தனது குடும்பம் வாடகைக்கு தங்கியுள்ள வீட்டின் உரிமையாளர் கடந்த மே மாதம் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததோடு, வீட்டு உரிமையாளரான 37 வயது நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டான். இதையடுத்து, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.