இந்தியாவில் 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...!


இந்தியாவில் 5 ஆயிரத்திற்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு...!
x

Image Courtacy: PTI

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,858 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 4 ஆயிரத்து 858 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது.

நேற்று 5 ஆயிரத்து 664 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 4 ஆயிரத்து 858 ஆக குறைந்துள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,45,34,188 லிருந்து 4,45,39,046 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 4,735 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4,39,57,929 லிருந்து 4,39,62,664 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 18 பேர் பலியாகினர். இதுவரை 5,28,355 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 47,922 லிருந்து 48,027 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை நாடு முழுவதும் 216 கோடியே 70 லட்சம் 'டோஸ்' கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நாளில் 13,59,361 கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Next Story