தந்தையை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை


தந்தையை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 24 Feb 2023 12:15 AM IST (Updated: 24 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

தந்தையை கொன்ற வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உடுப்பி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

மங்களூரு:-

கொலை

உடுப்பி மாவட்டம் பெரம்பள்ளியை சேர்ந்தவர் பிரஜோத் ஷெட்டி (வயது 50). கூலி தொழிலாளி. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் தாய் மற்றும் தந்தையுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். அந்த நிலையில் கடந்த 2020-ம் ஆண்டு பிரஜோத்துக்கும் அவரது தந்தைக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பிரஜோத், தனது தந்தையை சரமாரியாக தாக்கினார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய், பிரஜோத்தை தடுக்க முயன்றுள்ளார். அப்போது அவரையும் பிரஜோத் தாக்கி உள்ளார். இதில் பிரஜோத்தின் தந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தாய் பலத்த காயம் அடைந்தார்.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து உடுப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரஜோத்தை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு உடுப்பி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி தினேஷ் ஹெக்டே தீர்ப்பு வழங்கினார். அப்போது, பிரஜோத் ஷெட்டி மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் தாயை தாக்கிய வழக்கில் அவருக்கு கூடுதலாக 3 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


Next Story