ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை கைதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை


ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை கைதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
x

ராஜஸ்தான் சிறையில் ஆயுள் தண்டனை கைதி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஜெய்ப்பூர்,

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு 7 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த வழக்கில் 43 வயதான அங்குர் படியா என்ற நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் 2018-ம் ஆண்டு கோட்டா மாவட்ட கோர்ட்டு அவருக்கு மரண தண்டனை விதித்தது.

இதையடுத்து இந்த வழக்கு தொடர்பான மேல்முறையீட்டில், கடந்த 2021-ம் ஆண்டு ராஜஸ்தான் ஐகோர்ட்டில் அங்குர் படியாவின் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. தொடர்ந்து பைகானேர் சிறையில் அடைக்கப்பட்ட அவர், பின்னர் சங்கானேர் திறந்தவெளி சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில், சங்கானேர் சிறைச்சாலையில் நேற்று மாலை அங்குர் படியா துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஹேமந்த் சிங் தெரிவித்துள்ளார்.


Next Story