சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.36 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்


சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.36 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x

சிக்பள்ளாப்பூரில் சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

கோலார் தங்கவயல்:

சிக்பள்ளாப்பூரில் சரக்கு வாகனத்தில் கடத்திய ரூ.36 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்களை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

சட்டசபை தேர்தல்

கர்நாடக சட்டசபைக்கு அடுத்த மாதம்(மே) 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மேலும் வாக்காளர்களை கவர பணம், பரிசு பொருட்கள், மதுபானம் உள்ளிட்டவைகளை கொடுப்பதை தடுக்க போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் மதுபானம் கடத்திச் செல்லப்படுவதாகவும், அவற்றை வாக்காளர்களுக்கு வினியோகிக்க சிலர் திட்டமிட்டு இருப்பதாகவும் கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிக்பள்ளாப்பூர் மாவட்ட கலால் துறை அதிகாரிகள் சிக்பள்ளாப்பூர் டவுனில் உள்ள முக்கிய சாலையில் சோதனையின் ஈடுபட்டனர்.

பறிமுதல்

அப்போது அவ்வழியே வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. போலீசார் வாகனத்தை சோதனை செய்துகொண்டிருந்த போது சரக்கு வாகன டிரைவர் மற்றும் கிளீனர் ஆகிய இருவரும் தப்பி ஓடிவிட்டனர்.

இதையடுத்து சரக்கு வாகனம் மற்றும் அதில் கடத்தி வரப்பட்ட ரூ.36.18 லட்சம் மதிப்பிலான மதுபான பாட்டில்கள், பாக்கெட்டுகளை கலால் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய டிரைவர் மற்றும் கிளீனரை கலால் துறை அதிகாரிகள் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story