எதிர்க்கட்சிகள் அமளி: மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு..!
மணிப்பூர் விவகாரத்தை வைத்து எதிர்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தொடரந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.
டெல்லி,
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கமளிக்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இந்தியா, இந்தியா என முழக்கமிட்டனர். எதிர்க்கட்சிகளின் முழக்கத்தையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரும் மோடி.. மோடி.. மோடி..என முழங்கினர். இவ்வாறு இரு தரப்பினரும் மாறி மாறி முழக்கங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைள் முடங்கி வருகிறது. இன்றும் மக்களவையில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கியது. அடுத்தடுத்து அவை கூடிய போதும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
Related Tags :
Next Story