மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? வெளியான புதிய தகவல்


மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? வெளியான புதிய தகவல்
x
தினத்தந்தி 10 March 2024 4:30 PM IST (Updated: 11 March 2024 4:10 PM IST)
t-max-icont-min-icon

கடந்த 2019-ம் ஆண்டு மார்ச்10-ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

புதுடெல்லி,

மக்களவையின் பதவிக் காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைய உள்ளது. எனவே, புதிய அரசை அதற்குள் அமைக்க வேண்டிய கட்டாயம் ஆகும். இதனால், வரும் ஏப்ரல், மே மாதங்களில் மக்களவைத் தேர்தலை நடத்த தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாசல பிரதேசம் ஆகிய மநிலங்களில் சட்டமன்ற தேர்தலும் நடைபெற உள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இறுதிகட்ட ஆய்வு செய்வதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு பல்வேறு மாநிலங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் வரும் 11, 12, 13-ம் தேதிகளில் ஜம்மு - காஷ்மீர் செல்லும் தேர்தல் குழுவினர், மக்களவைத் தேர்தலுடன் ஜம்மு - காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் நடத்தலாமா என்பது குறித்து கள ஆய்வுகளை நடத்த உள்ளனர். எனவே, மார்ச் 14 அல்லது 15-ம் தேதி மக்களவைத் தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு மார்ச்10-ம் தேதி மக்களவை பொதுத்தேர்தல் தொடர்பான அட்டவணையை தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டது.


Next Story