காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை


காதல் திருமணம் செய்த தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 29 Nov 2022 2:44 AM IST (Updated: 29 Nov 2022 2:45 AM IST)
t-max-icont-min-icon

விஜயாப்புரா அருகே பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்ட தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

விஜயாப்புரா-

காதல் திருமணம்

விஜயாப்புரா மாவட்டம் முத்தேபிகால் டவுன் ஏ.பி.எம்.சி. பகுதியில் வசித்து வந்தவர் திப்பண்ணா ஒசமணி(வயது 34). இவரது மனைவி சுஜாதா (30). திப்பண்ணா தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திப்பண்ணாவுக்கும், சுஜாதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர்.

ஏ.பி.எம்.சி. அருகே வாடகை வீட்டில் தம்பதி வசித்து வந்தனர். தற்போது சுஜாதா 7 மாத கர்ப்பிணயாக இருந்து வந்தார். இந்த நிலையில், நேற்று காலையில் திப்பண்ணாவின் வீடு நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்தது. ஜன்னல் வழியாக அக்கம் பக்கத்தினர் எட்டி பார்த்த போது திப்பண்ணாவும், சுஜாதாவும் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்கள்.

தம்பதி தற்கொலை

இதுபற்றி தகவல் அறிந்ததும் முதோல் போலீசார் விரைந்து வந்து தம்பதியின் உடல்களை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது திப்பண்ணாவும், சுஜாதாவும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் திப்பண்ணா, சுஜாதாவின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக தெரிகிறது. பெற்றோர் எதிர்ப்பையும் மீறி 2 பேரும் திருமணம் செய்திருந்தார்கள்.

இவர்களது காதல் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன், வீட்டில் சேர்க்காமல் இருந்ததால் தம்பதி தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். இதுகுறித்து முத்தேபிகால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story