புதரில் கிடந்த சிறுத்தை குட்டிகள்


புதரில் கிடந்த  சிறுத்தை குட்டிகள்
x

புதரில் சிறுத்தை குட்டிகள் கிடந்தன.

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் மான்வி தாலுகாவில் நிரமான்விகுட்டா கிராமத்தின் அருகே அந்தப்பகுதியை சேர்ந்த சிலர் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர். அப்போது அந்தப்பகுதியில் உள்ள புதரில் 2 சிறுத்தை குட்டிகள் கிடந்தன. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், அந்த சிறுத்தை குட்டிகளை பிடித்தனர். இதுகுறித்து அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த சிறுத்தை குட்டிகளை மீட்டு வனப்பகுதியில் கொண்டு விட்டனர். மேலும் அந்தப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருக்கலாம் என அந்தப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.


Next Story