மத்தியபிரதேசம்: 12 வயது சிறுவன் பள்ளி பஸ்சில் சுருண்டு விழுந்து பலி - மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
மத்தியபிரதேசத்தில் 12 வயது சிறுவன் பள்ளி பஸ்சில் சுருண்டு விழுந்து பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போபால்,
மத்தியபிரதேசத்தின் பிந்த் மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவன் மனிஷ் ஜாதவ். இவன் அங்குள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த 15-ந் தேதி வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற மனிஷ் ஜாதவ், மதியம் வகுப்புகள் முடிந்த பிறகு வீடு திரும்புவதற்காக பள்ளி பஸ்சில் ஏறினான்.
அப்போது அவன் திடீரென மயங்கி சரிந்தான். இதனால் அதிர்ச்சியடைந்த பஸ் டிரைவர் சிறுவனை உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள் சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மேலும் மாரடைப்பு ஏற்பட்டு சிறுவன் உயிரிழந்ததாகவும் டாக்டர்கள் கூறினர்.
Related Tags :
Next Story