நேபாளத்தில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவு: டெல்லியிலும் உணரப்பட்டது...!! - 3 பேர் பலி
டெல்லி மற்றும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காத்மண்டு,
நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் இன்று அதி காலை 1.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளது.
மேலும் இந்நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. முன்னதாக நேற்று காலை 4.5 அளவில் நேபாள நாட்டில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளும் பாதிக்கப்பட்டன.
இந்நிலையில் நிலநடுக்கத்தால் வீடுகள் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த அக்டோபர் 19-ந்தேதி நேபாள நாட்டின் தலைநகர் காத்மண்டுவில் ரிக்டரில் 5.1 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அந்த நிலநடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதேபோன்று ஜூலை 31-ந்தேதி காத்மண்டுவில் இருந்து தென்கிழக்கே 147 கி.மீ. தொலைவில் ரிக்டரில் 6.0 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த ஏப்ரல் 25-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் காத்மண்டு மற்றும் பொகாரா நகரங்களுக்கு இடையே கடுமையான தாக்கம் ஏற்பட்டது. அதில், அந்நாட்டு மக்களில் 8 ஆயிரத்து 964 பேர் உயிரிழந்தனர். 22 ஆயிரம் பேர் காயம் அடைந்தனர்.